Pages

Monday, August 9, 2010

ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..!

ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம் :1

சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த படிகாரம் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த படிகாரம் நமக்கு மிக எளிதில் கிடைக்கக்கூடிய பொருளும் கூட, அதாவது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றது.

இந்த படிகாரத்தை சிறிதளவு எடுத்து கொள்ளவும், பின் அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அவற்றை நன்கு சூடேற்றவும். கல் நன்கு சூடேறியதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிறிதளவு படிகாரத்தை அவற்றில் வைத்து நன்றாக உருக செய்ய வேண்டும்.

படிகாரம் நன்றாக உருகியதும், அடுப்பில் இருந்து இறக்கி அவற்றை தோசை கல்லில் வைத்தே நன்றாக பொடி ஆகும் வரை இடித்து கொள்ளவும்.

பெரியவர்களாக இருந்தால் இடித்த பவுடரை ஒரு பவுலில் 1/2 ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள், அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும்.

சிறிய குழந்தைகளாக இருந்தால் இரண்டு சிட்டிகை அளவு இடித்த பவுடரை எடுத்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் ஒரே நாளில் சளி இருமல் பிரச்சனை  சரியாகிவிடும்.

ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்: 2

நாள்பட்ட நெஞ்சி சளியை குணப்படுத்தும் ஒரு அற்புத பானத்தை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம். இந்த பானத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். சரி வாங்க தயாரிப்பு முறையை பற்றி பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள் மூன்று வெற்றிலை, சிறிதளவு இஞ்சி துண்டு மற்றும் 10 மிளகு.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும், தண்ணீர் நன்கு கொதித்ததும், பொடிதாக நறுக்கிய வெற்றிலை, பொடிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.



பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து வடிகட்டி அருந்த வேண்டும். நாள்பட்ட நெஞ்சி சளியை நொடியில் போக்கிட இது ஒரே ஒரு கிளாஸ் குடிங்க போதும், எவ்வளவு பயங்கரமான சளி, இருமல் இருந்தாலும் ஒரே நாளில் சரி ஆகிடும்.

 (Cough home remedies in tamil) 

No comments:

Post a Comment